பிரதி அதிபர் செய்தி
திரு.த.புவனேந்திரன்
ஆசியுரை
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”
தம்பை நகர் தங்த தங்கத்தாய் தங்கம்மாள் ஆற்றிய அரும் பணியால் 1923 ஆம் ஆண்டு ஐப்பசி 20 ஆம் திகதி “ஸ்ரீ சண்முக வித்தியாலயம்” ஆக ஆரம்பிக்கப்பட்டு, இன்று திருகோணமலை மண்ணில் பெண் கல்வியில் தனக்கு என்று ஓரிடம் பிடித்துள்ள பாடசாலை திஃஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி ஆகும். பெண்களுக்கான கல்வி எதிர் நோக்கிய சவால்களும், சமூக கட்டுக்கோப்புக்களும் நாம் அறியாததல்ல. தடைகளைத் தகர்த்து இன்று பலநூறு கனவுகளுக்கு அடி நாதமாக உள்ளது இக்கல்லூரி.
கால ஓட்டம் நம்மை சிறுகச் சிறு தன்பால் ஈர்த்துக்கொண்டுள்ளது. ஆளுமை வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் தொழிநுட்பம் சார்ந்து இயங்கிக்கொண்டுள்ளது. அதற்குத் தகுந்தாற்போல நம் கல்லூரி வரலாற்றில் இன்னுமோர் வளர்ச்சிப் படிக்கட்டாக விளங்கவுள்ள முயற்சிதான் கல்லூரியின் இணையத்தள வடிவமைப்பு. ஓர் கிளிக், உலகம் சுருங்கிவிட்டது.
நேரம் சேமிக்கப்படவும் தகவல் பரிமாற்றம் இலகுவாக்கப்படவும் பயனுள்ள இம்முயற்சி கல்லூரி தொடர்பான தரவு தளமாக வினைத்திறனாக இயங்கும் என்பதில் ஐயமில்லை.
இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் மற்றும் மாணவர் குழாம் விவேகமாகவும் விடா முயற்சியுடனும் உருவாக்கியுள்ள கல்லூரி இணைய வடிவமைப்புத் தளம் பூரணமாக கட்டமைக்கப்படவும், உடனுக்குடன் பதிவேற்றப்பட்டு கல்லூரியை இணையவழி அனைவர் கைகளிலும் சேர்க்கவும் எல்லாம் வல்ல இறைவன் கோணை நாதரின் ஆசிகளை நாடுகின்றேன்.
“காலத்தால் அழியாச் செல்வம் கணிணி வழியிலும் நீடு வாழும்”
திரு.த.புவனேந்திரன்
பிரதி அதிபர்
தி/தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி.







