தி/தி ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி

தி/தி ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி

பள்ளி இணையதளம் முன்வைப்பினை செய்யும் நிகழ்ச்சி

whatsapp-image-2025-02-14-at-4.20.00-pm-1.jpeg
whatsapp-image-2025-02-14-at-4.20.06-pm.jpeg
whatsapp-image-2025-02-14-at-4.20.08-pm.jpeg

 

ஈழ நாட்டின் கீழ் திசையில்
எழில் மலிந்த துறைமுகம்
ஈசன் உறையும் கோணமலை
எங்கும் இசை மலிந்தது
வாழு மக்கள் கல்வி செல்வம்
வகையினெய்தி வாழவே
வகுத்த கல்வி முறையில் நல்கி
வைப்பதெங்கள் பள்ளியே

எங்கள் பள்ளி கலையின் தெய்வம்
இனித மைந்த தாயகம்
ஈழநாட்டின் சமயம் எல்லாம்
இருக்கும் சைவப் பேடகம்
மங்களம் சேர் சிறுவர் நாங்கள்
வண்ண பாடல் பாடியே
மயில்கள் போல ஆடி மகிழும்
வடிவமைந்த பீடகம்

கைத்தொழில்கள் கமத் தொழில்கள்
காட்டிச் செல்வம் கூட்டியே
கலைகள் எல்லாம் புதிய முறையில்
கற்பித்தெம்மை ஏத்திடும்
இத்திறத்தில் வளம் பெருக்கி
எம்மை நல்கும் சண்முக
வித்தியாசாலைக்கு வாழ்த்து
விரும்பி நாமும் கூறுவோம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க என்று வாழ்த்துவோம்
வந்தனங்கள் சொல்லி நீடு
வாழ்கவென்று வாழ்த்துவோம்
தாழ்மையோடு பாலரெல்லாம்
தாழ்ந்து தெய்வம் போற்றியே
தங்கம்மாளின் தருமத்தொண்டு
தரணி போற்ற வாழ்த்துவோம்.

ஆக்கம் - சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர். 1951